உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊரக வளர்ச்சி ஊழியர்கள் சங்கம் முற்றுகை

ஊரக வளர்ச்சி ஊழியர்கள் சங்கம் முற்றுகை

குஜிலியம்பாறை : மேல்நிலைத் தொட்டி ஆப்பரேட்டர்கள், துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்களின் கோரிக்கை குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்காதது ,தூய்மை காவலர்களுக்கு காப்பீட்டு அட்டை தராதது,மேல்நிலைத் தொட்டி ஆப்பரேட்டர்களுக்கு தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்கு ரூ.300 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் குஜிலியம்பாறை ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் பாலச்சந்திர போஸ் தலைமை வகித்தார்.சி.ஐ.டி.யு., ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி, ஒன்றிய நிர்வாகிகள் தங்கராஜ், வீரமணி, கட்டுமான சங்கம் செல்வராஜ், வாலிபர் சங்கம் சரவணன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ