உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நவ., டிச.,ல் 2 கட்ட போராட்டம்; ஊரக வளர்ச்சி ஓய்வூதியர்கள் சங்கம் அறிவிப்பு

நவ., டிச.,ல் 2 கட்ட போராட்டம்; ஊரக வளர்ச்சி ஓய்வூதியர்கள் சங்கம் அறிவிப்பு

திண்டுக்கல்; ''கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவ., டிச.,ல் 2 கட்ட போராட்டம் நடத்தப்படும் என திண்டுக்கல்லில் நடந்த தமிழக ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,'' என, சங்க மாநில தலைவர் ராமமூர்த்தி தெரிவித்தார். அவர் கூறியதாவது: மாநாட்டில் ஊரக வளர்ச்சி ஊழியர்கள், அரசு ஊழியர்களின் நலனை பாதுகாக்க 40க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நான்கரை ஆண்டுகளாக வலியுறுத்தப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நவ., டிச.,ல் 2 கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். வளர்ச்சி திட்டப் பணிகளில் குறைபாடுகள் என காரணம் காட்டி ஓய்வு பெறும் நாளில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வது, சஸ்பெண்ட் செய்வது, ஓய்வுபெற்ற பின் ஆண்டுக்கணக்கில் தீர்வு காணப்படாமல் நீள்வது, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளோம். சமவேலைக்கு சம ஊதியம், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். அனைவருக்கும் பாகுபாடின்றி பென்ஷன் வழங்க வேண்டும். அரசுத் துறையில் வேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்கவேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தில் நிலவும் குளறுபடிகளை நீக்கி மொத்த செலவையும் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை