சாதித்த சேரன் குளோபல் பள்ளி
செம்பட்டி: சித்தையன்கோட்டை சேரன் குளோபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 8 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியுடன் சாதனை படைத்து வருகிறது. மாணவி கே.ஷாலினி தமிழ் 97, ஆங்கிலம் 98, கணிதம் 96, அறிவியல் 100, சமூக அறிவியல் 95 என 486 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவர் எம்.முஜ்ஜம்மில், தமிழ் 95, ஆங்கிலம் 95, கணிதம் 95, அறிவியல் 92, சமூக அறிவியல் 97 என 474, மாணவி கே.மேகா 472 மதிப்பெண் பெற்றார். 7 பேர் 450க்கு மேலும், 19 பேர் 400க்கு அதிகமாகவும் மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்களை பள்ளி தலைமை நிர்வாக அலுவலர் எஸ்.அபிஷேக்சிவக்குமார், முதல்வர் ஏ.மகாலட்சுமி பாராட்டினர். துணை முதல்வர் சரண்யா பங்கேற்றார்.