உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீபாவளிக்காக ரூ.4 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனை அய்யலுார் சந்தையில் விறுவிறுப்பு

தீபாவளிக்காக ரூ.4 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனை அய்யலுார் சந்தையில் விறுவிறுப்பு

வடமதுரை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வாரச்சந்தையில் நேற்று ரூ.4 கோடிக்கு ஆடுகள் , கோழிகள் விற்பனையானது.வடமதுரை அருகே அய்யலுாரில் வியாழன்தோறும் நடக்கும் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை அதிகம் நடக்கும். அக்.31 ல் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய சந்தை என்பதால் நேற்று ஆயிரக்கணக்கில் ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு வந்தன. சந்தை மழை நீரால் சகதியாக மாறி இருந்ததால் வியாபாரிகள் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் வியாபாரத்தை நடத்தினர். இதனால் இவ்வழியே பஸ் போக்குவரத்து அடிக்கடி தடைபட்டு ஸ்தம்பித்தது . அதிகாலை 3:00 மணிக்கு துவங்கிய வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து காலை 9:00 மணிக்கு முடிந்தது.உயிர் எடை அளவில் நாட்டு கோழி கிலோ ரூ.450, ஆடு ரூ.700, சண்டை சேவல் ரூ. 15,000 வரையும் விற்றது. சந்தையில் விற்பனை ரூ.4 கோடியை தாண்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை