உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சண்முக நதியில் துாய்மை பணி

சண்முக நதியில் துாய்மை பணி

பழநி, ஆக.29 பழநி சண்முக நதியில் அமலைச் செடிகள், குப்பையை அகற்றி துாய்மை செய்யும் பணியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பினர் ஈடுபட்டனர். பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நதியில் நீராடுவது வழக்கம். சில மாதங்களாக இந்த நதியில் அமலைச் செடிகள் மிகுந்து, பிளாஸ்டிக், துணிகள் என குப்பைக்கழிவுகளால் அசுத்தமாக காணப்பட்டது. இதையடுத்து ‘வீ த லீடர்ஸ்’ தன்னார்வ அமைப்பு சார்பில் சண்முக நதி பகுதியில் அமலைச் செடிகள், குப்பையை அகற்றி துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். 6 மாதத்திற்குள் நதி முழுதும் துாய்மைப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை