உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூட்டுறவு வங்கியில் வைப்பு நிதி செலுத்தியவர்களுக்கு மரக்கன்று

கூட்டுறவு வங்கியில் வைப்பு நிதி செலுத்தியவர்களுக்கு மரக்கன்று

வத்தலக்குண்டு; வத்தலக்குண்டு கூட்டுறவு நகர வங்கி சார்பில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மூத்த குடிமக்களுக்கு 8.50 சதவீதம் மற்றவர்களுக்கு 8.25 சதவீத வட்டி வழங்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் வைப்பு நிதி செலுத்தினர். இவர்களுக்கு திண்டுக்கல் மண்டல இணைப்பதிவாளர் சுபாஷினி வாழ்த்து தெரிவித்து வெற்றிலை செடி கன்றுகள், மரக்கன்றுகளை வழங்கினார். திண்டுக்கல் சரக துணை பதிவாளர் உஷா நந்தினி, வங்கி செயலாட்சியர் மருதுபாண்டி, வங்கி பொது மேலாளர் வினோதினி, நகை மதிப்பீட்டாளர் முத்துப்பாண்டி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ