மேலும் செய்திகள்
' கொடை'யில் சூறைக்காற்றுடன் சாரல் மழை
20-Jul-2025
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காற்றுடன் சாரல் மழை பெய்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் நீடிக்கிறது. குளு குளு கொடைக்கானலில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மாலை வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்ய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகரை பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. இங்குள்ள சுற்றுலாத்தலங்களில் சில்லிடும் சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.
20-Jul-2025