மேலும் செய்திகள்
கோயில்களில் கார்த்திகை வழிபாடு
02-Apr-2025
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி சஷ்டி பூஜை யொட்டி முருக பெருமானுக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காமாட்சி மவுனகுருசாமி மடம் , கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி , குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயில் முருகப்பெருமான் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.கன்னிவாடி :சோமலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் ஓம்கார விநாயகர், பாலதண்டபாணிக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. செவ்வரளி மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.காரமடை ராமலிங்க சுவாமி கோயில், தோணிமலை முருகன் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சஷ்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது.
02-Apr-2025