சாதித்த விவேகானந்தா பள்ளி
ஆயக்குடி: பிளஸ் 2 தேர்வில் பழநி ஆயக்குடி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி லாவண்யா 600க்கு 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் இயற்பியல் கணினி அறிவியலில் 100, வேதியியல் பாடத்தில் 99, ஆங்கிலத்தில் 98,தமிழில் 96, கணிதத்தில் 95 மதிப்பெண் பெற்றுள்ளார். ரம்யா 585 , சுபிக் ஷா 582 மதிப்பெண் பெற்றுள்ளனர். பள்ளியில் இயற்பியலில் இரண்டு , கணினி அறிவியலில் ஐந்து பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சாதித்த மாணவர்களை பள்ளி தாளாளர் செல்வராஜ், முதல்வர் காசி ஆறுமுகம் வாழ்த்தினர்.