உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி மலையில் துாவப்பட்ட விதைப்பந்துகள்

பழநி மலையில் துாவப்பட்ட விதைப்பந்துகள்

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பழநி மலை மீது விதைப்பந்துகள் துாவப்பட்டன. பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் மனநல காப்பகத்தில் விழுதுகள் தன்னார்வ அமைப்பு மூலம் விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டன. அவற்றை நேற்று கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் பழநி மலை மீது வீசப்பட்டது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் வீசப்பட்ட விதைப்பந்துகள் மரமாக ஏதுவாக இருக்கும். கோயில் இணைக் கமிஷனர் மாரிமுத்து கூறுகையில், பழநி மலை மீது பசுமை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 6000 விதைப்பந்துகள் துாவப்பட்டுள்ளன. மேலும் பல ஆயிரக்கணக்கான விதைப்பந்துகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு பணிகள் நிறைவு செய்த பின் விதை பந்துகள் துாவப்படும் என்றார். விழுதுகள் தன்னார்வ அமைப்பு ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !