மேலும் செய்திகள்
மனைவி, மகளுடன் மெக்கானிக் தற்கொலை
23-Oct-2024
பழநி: பழநி முல்லை நகரில் கணவன், மனைவி, மகள் இறப்புக்கான காரணம் அறிய உடற்பாகங்களை விஸ்ரா சோதனைக்கு அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.பழநி முல்லை நகரை சேர்ந்தவர் மெக்கானிக் இளங்குமரன் 58. இவர் வீட்டின் ஒரு அறையில் துாக்கிலும், மற்றொரு அறையில் இவரது மனைவியான ஆசிரியை ரேணுகாதேவி 54, மகள் தேன்மொழி 17 , இறந்து கிடந்தனர். மனைவி, மகள் தலையில் காயம் உள்ளது. தலைக்காயத்தால் உயிரிழந்தாரா, விஷம் அருந்தி உயிரிழந்தவரா என கண்டறிய போலீசார் , இறந்தவர்களது உடல் பாகங்களை விஸ்ரா சோதனைக்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளனர். உடல் பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
23-Oct-2024