உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / என்.பி.ஆர்., ல் ஆக.29ல் சீனியர் தடகள போட்டி

என்.பி.ஆர்., ல் ஆக.29ல் சீனியர் தடகள போட்டி

நத்தம்: -திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக 5வது மாவட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.29 ல் நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழும தடகள மைதானத்தில் நடக்க உள்ளதாக மாவட்ட தடகள சங்க தலைவர் துரை, செயலாளர் எம்.சிவகுமார் கூறினர். மேலும் அவர்கள் கூறியதாவது: 14,16,18, 20 வயது பிரிவில் நீளம், உயரம் தாண்டுதல், வட்டு, ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தங்களது பதிவுகளை gmail.comல் ஆக.26 மாலை 6:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். முதல், இரண்டு இடங்களில் வெற்றி பெறுவோர் செப்டம்பரில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பாக நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் விபரங்களுக்கு 73734 44447, 99941 33303 ல் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை