மேலும் செய்திகள்
முதன்மை மாவட்ட நீதிபதி பொறுப்பேற்பு
14-Nov-2024
திண்டுக்கல்: ''மக்களுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை'' என முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா பேசினார்.திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மண்டபத்தில் திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட அளவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா தொடங்கி வைத்தார். கலெக்டர் பூங்கொடி முன்னிலை வகித்தார். சார்பு நீதிபதி திரிவேணி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கனகராஜ், ஆர்.டி.ஓ., சக்திவேல், தாசில்தார் ஜெயபிரகாஷ், சமூக நல அலுவலர் புஷ்பகலா கலந்துகொண்டனர்.பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டதில் சிறப்பாக அமைக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அரங்கிற்கும் முதல் பரிசு, ஊரக வளர்ச்சித்துறைக்கு 2ம் பரிசு , வருவாய்த்துறைக்கு 3ம் பரிசு வழங்கப்பட்டது.முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா பேசியதாவது: மக்களுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை. நீங்கள் கொடுக்கும் மனுவிற்கு எதிர் தரப்பையும் அழைத்து வைத்து பேசப்படும். இரு தரப்பினர் இடையே உள்ள பிரச்னை சரி செய்ய முடியுமா எனபார்க்கப்படும். முடியவில்லையென்றால் யார் புகார் கொடுத்தார்களோ அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு நீதி மன்றமே இலவச வழக்கறிஞர் வைத்து கொடுக்கப்படும்.காசு கொடுக்க முடியவில்லை என்ற நிலை மாற்றப்பட்டுவிட்டது. ஒரு மனு கூட நிலுவையில் இல்லை இந்த சங்கமத்தின் நோக்கமே அரசுத்துறை, மக்கள் இடையிலான பாலத்தை உருவாக்குவதே ஆகும் என்றார்.
14-Nov-2024