ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தீக்குளிக்க முயன்றதால் அதிர்ச்சி
நெய்க்காரபட்டி: திண்டுக்கல் மாவட்டம் பழநி நெய்க்காரப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு குடிசையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியல் , தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். நெய்க்காரப்பட்டி அருகே அ.கலையம்புத்துார் ஊராட்சி அழகாபுரி பகுதியில் பழநி-கொழுமம் சாலை அருகே பாறை புறம்போக்கு உள்ளது. இப்பகுதியில் ஊராட்சி சார்பில் சமுதாயக் கூடம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அங்கு ஆக்கிரமிப்பு குடிசைகள் இருந்தன. இதை அகற்றி தடுப்பு அமைக்க அதிகாரிகள் நேற்று வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சக்திவேல் 45, மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.