உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துவங்கியது குறுவட்ட தடகள போட்டிகள்

துவங்கியது குறுவட்ட தடகள போட்டிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் குடியரசு தின, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் குறுவட்ட அளவில் 5 பிரிவாக நடத்தப்படுகின்றன. திண்டுக்கல் 'அ' குறுவட்ட தடகளப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கியது. 800 பேர் பங்கேற்றனர். குண்டு, வட்டு, ஈட்டி எறிதல், உயரம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. குறு வட்ட போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், வருவாய், மாவட்ட அளவில் அடுத்தடுத்த போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !