உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பட்டு இயக்குனர் அலுவலகம் முற்றுகை

பட்டு இயக்குனர் அலுவலகம் முற்றுகை

திண்டுக்கல்: பட்டுவளர்ச்சித்துறை அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் சங்கத்தின் பெயரில் போலி புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு வர சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜூக்கு பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அழைப்பு விடுத்திருந்தார். இதை கண்டித்து தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் அருணாச்சலம் தலைமையில் விவசாயிகள் திண்டுக்கல் பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகளுடன் விவசாயிகள் விவாதத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி