ஒற்றை யானை அட்டகாசம்
பண்ணைக்காடு: பண்ணைக்காடு வாழைகிரியில் முகாமிட்டு போக்கு காட்டும் ஒற்றை யானையால் விவசாயிகள் பாதித்துள்ளனர். தாண்டிக்குடி, பண்ணைக்காடு பகுதியில் சில மாதங்களாக மூன்று யானைகள் முகாமிட்டு அங்குள்ள மலை வாழை, பந்தல் காய்கறிகள், காபி, ஏலக்காய் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பண்ணைக்காடு வாழைகிரி பகுதியில் புகுந்த ஒற்றை யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. வெடிகள் வைத்து விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டும் பலனில்லை. மாறாக யானை வனத்துறையினரை விரட்டி அச்சுறுத்துகிறது. இந்த நடவடிக்கை கண் துடைப்புக்கு நடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். யானைகளை அடர் வனப்பகுதியில் இடம் பெயர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.