அக்கா, -தங்கை நீரில் மூழ்கி பலி
சாணார்பட்டி : தடுப்பணையில் குளிக்க சென்ற அக்கா, தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே சோழகுளத்துப்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் - வேலுத்தாயி தம்பதிக்கு, பிளஸ் 2 படித்த பேபி ஸ்ரீ, 18, ஆறாம் வகுப்பு படித்த நாகசக்தி, 12, ஆகிய இரு மகள்கள் இருந்தனர். நேற்று இருவரும் அஞ்சுகுளிப்பட்டி சங்கிலியான் தடுப்பணையில், பெற்றோருடன் குளிக்கச் சென்றனர். பெற்றோர், துவைத்த துணிகளை காயவைக்க சென்ற நேரத்தில், ஆழமான பகுதிக்கு சென்ற நாகசக்தி நீரில் மூழ்கினார். தங்கையை காப்பாற்ற சென்ற பேபிஸ்ரீயும் நீரில் மூழ்கினார். இருவரும் பரிதாபமாக இறந்தனர்.