உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கள்ளக்காதல் தகராறில் வாலிபர் கொலை இரு பெண்கள் உட்பட 6 பேர் கைது

கள்ளக்காதல் தகராறில் வாலிபர் கொலை இரு பெண்கள் உட்பட 6 பேர் கைது

திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே கை, கால் கட்டிய நிலையில் கிணற்றுக்குள் இருந்து வாலிபர் உடல் மீட்கப்பட்ட வழக்கில் கள்ளக்காதல் விவகாரத்தில் துாக்கமாத்திரை கொடுத்து அவரை கொலை செய்தது தெரிய வர 2 பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டியில் கணேசன் என்பவரது தோட்டம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் ஜூன் 15 ல் வாலிபர் உடல் கை, கால்கள், வாய் கட்டப்பட்டு சாக்குமூடையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணையில், இறந்துகிடந்தவர் வேடசந்துார் பூத்தாம்பட்டியை சேர்ந்த ஜோதிமணி 37 ,என்பது தெரிந்தது.இவருக்கும் வேடசந்துாரை சேர்ந்த முருகன் மனைவி கோமதிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் கோமதிக்கு வேறொருவரான ஸ்டாலின் உடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஜோதிமணி இடையூறாக இருந்துள்ளார். இதனால் கோமதி ,அதே பகுதி நடராஜன் 60, அவரின் மனைவி நீலா 55, ஸ்டாலின் 27, ஆரோக்கியசாமி 37, குட்டி முத்து 24 ,ஆகியோருடன் சேர்ந்து ஜோதிமணியை கொலைசெய்ய முடிவு செய்தார். அதன்படி கோமதி, ஜோதிமணியை வீட்டிற்கு வரவழைத்து உளுந்தங்கஞ்சியில் 4 துாக்க மாத்திரை, காபியில் 4 துாக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளனர். அதன்பின் அவரை கழுத்தை நெரித்து கொலைசெய்து கை, கால்கள், வாயை கட்டி உடலை கிணற்றில் வீசியது தெரிந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைதுசெய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ