உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

திண்டுக்கல்:திண்டுக்கல் வனக்கோட்டம் சார்பில் வனத்துறை ஊழியர்கள், அலுவலர்களுக்கு வன நிலப்பரப்பு வரைபட உருவாக்கத்திற்கான கையடக்க ஜி.என்.எஸ்.எஸ்., ஜி.ஐ.எஸ்., கருவி குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி செப்.,7 முதல் 9 வரை திண்டுக்கல் வன விரிவாக்க மையத்தில் நடக்கிறது.திண்டுக்கல் மண்டல வன பாதுகாவலர் முகமது ஷபாப், மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா, உதவி வனவிரிவாக்க அலுவலர் வேல்மணி நிர்மலா ஆகியோர் பங்கேற்று செயற்கைக்கோள் வழிநடத்தல், புவியியல் தகவமைப்பு முறைமை தொழில் நுட்பங்களில் நவீன திறன் பயிற்சி அளித்தல், வனப்பகுதி வரைபடம், மலை, காடுகளின் எல்லைகளை துல்லியமாக வரைபடமாக்குதல், ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல் குறித்து பயிற்சி அளித்தனர். மேலும் வன வளங்களைக் கண்காணித்தல், செயற்கைக்கோள் பயன்பாடு, வனப்பகுதிகளில் களப்பணியின் போது கையடக்க ஜி.என்.எஸ்.எஸ்., கருவிகளை பயன்படுத்தி துல்லியமான புவியியல் புள்ளிகள், தரவுகளை சேகரிக்கும் திறனை வளர்த்தல் குறித்தும் பயிற்சி அளித்தனர். திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களை சேர்ந்த வனச்சரக அலுவலர்கள், விரிவாக்க மைய அலுவலர்கள் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !