மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரியில் பொங்கல் விழா..
14-Jan-2025
திண்டுக்கல்: தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மாநில அளவிலான சிறுதானிய உணவு திருவிழா நடந்தது. பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் நடந்த இவ் விழாவுக்கு அரசின் கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். எம்.பி., சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் இ.பெரியசாமி, பெரியகருப்பன் கலந்து கொண்டனர். 2022- -23ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட நாமக்கல், நாகப்பட்டினம் கலெக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி , கல்லுாரி மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
14-Jan-2025