சோலார் விழிப்புணர்வு கூட்டம்
திண்டுக்கல் : பிரதம மந்திரி சூரிய கர் யோஜனா மின் திட்டம் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் பழைய கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மின்வாரிய மேற்பார்வை கண்காணிப்பு பொறியாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். மின்பகிர்மான வாரிய முன்னாள் இயக்குனர் வினோதன் பேசினார். செயற்பொறியாளர்கள் சாந்தி, நாகராஜ், கருப்பையா, உதவி செயற்பொறியாளர்கள் வேல்முருகன், சோலார் பேனல் நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்.