உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தென் மாவட்டங்களுக்கு தேவை பயணிகள் மின் ரயில்

தென் மாவட்டங்களுக்கு தேவை பயணிகள் மின் ரயில்

திண்டுக்கல்:சென்னையில் இயக்கப்படுவதை போன்று 'இஎம்யூ' (எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) மின் ரயில்களை மதுரையை மையமாக கொண்டு இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. பஸ் போக்குவரத்தை விட பாதுகாப்பானதாகவும் கட்டணம் குறைவாகவும் இருப்பதால் ரயில் போக்குவரத்தை பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் தென் மாவட்டங்களில் பயணிகள் ரயில்போக்குவரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக மதுரை உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் 4 தென்மாவட்டங்களில் வருகின்றன. சபரிமலைக்கு செல்வோர் தேனி வழியை பயன்படுத்துகின்றனர். முருகன், ஐயப்பன் சீசன்களின் இப்பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் பயணிக்கின்றனர்.பட்டாசு, டைரி, காலண்டர் இந்தியா முழுவதும் சிவகாசியில் இருந்து செல்கின்றன. ராஜபாளையத்தில் நுாற்பாலைகள், பஞ்சாலைகள் அதிகம் உள்ளன. தென்காசியில் மரத்தொழில்கள், சாத்துார், கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உள்ளன. துாத்துக்குடியிலும் அதிக தொழிற்சாலைகள் உள்ளன. எனவே மதுரையை மையமாக கொண்டு இதுபோன்ற நகரங்களுக்கு செல்ல மின்சார ரயில் வசதி செய்து தர வேண்டும். சமூக ஆர்வலரும் பேராசியருமான தமிழ்நாயகன் கூறியதாவது: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், பழநி உள்ளிட்ட நகரங்கள் அனைத்தும் மதுரையில் இருந்து 100 லிருந்து 150 கி.மீ.க்குள் உள்ளன. தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மதுரையில் உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனையும் வர உள்ளது. எனவே இப்பகுதியில் பயணிகள் மின் ரயில் சேவை காலத்தின் கட்டாயம். நேரம் மிச்சமாகும். ரயில்வேக்கும் வருவாய் அதிகரிக்கும். தென்மாவட்டங்கள் பொருளாதார ரீதியாக பெருவளர்ச்சியடையும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை