திண்டுக்கல்லில் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு
திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனை ரூ.30 கோடியில் புதுப்பிக்கும் பணியை மதுரை கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார். திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் தினமும் 6 ரயில்கள் நின்று செல்கின்றன. இதன்மூலம் தினமும் 18 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை மண்டலத்தில் அதிக வருவாய் ஈட்டும் ரயில்வே ஸ்டேஷன்களில் மூன்றாவது இடத்தில் உள்ள திண்டுக்கல்லில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகளுடன் ரூ.30 கோடியில் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்ய தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா த நேற்று வந்தார். அவரை ரயில் நிலைய மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார். நகரும் படிக்கட்டு, பயணிகள் காத்திருப்பு அறை, கழிப்பறை, வாகன நிறுத்துமிடம், நுழைவுவாயில் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார். கட்டட வரைபடத்தை பார்வையிட்ட அவர் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி நிறைவு செய்ய அறிவுறுத்தினர். அவர் கூறுகையில்,'' திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கான உட்கட்டுமான பணிகள் 2026ல் நிறைவு பெறும்'' என்றார். மதுரை கோட்ட சீனியர் மெக்கானிக்கல் இன்ஜினியர் முகமதுஜபார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.