எஸ்.பி.,யிடம் புகார் மனு
திண்டுக்கல்: ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் நயினார் முகமது தலைமையில் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், ‘திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த நபரின் முகநுால் கணக்கில் திருப்பரங்குன்றத்தில் தமிழக அரசு தீபம் ஏற்ற மறுத்தால் அனைத்து மசூதிகளும் தீக்கிரையாகும் என பொருள்படும் வகையில் அச்சுறுத்தல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதுபோல் கருத்து வெளியிட்டு பொதுஅமைதி, மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தனர்.