மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
05-Dec-2025
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூர், கோவைக்கு விழாக்காலங்கள் , விடுமுறை நாட்களில் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூர், கோவைக்கு செல்லும் மாணவர்கள், ஐ.டி., யில் பணிபுரிவோர், மருத்துவமனை, பிற அலுவல்களுக்கு செல்வோர் திண்டுக்கல், மதுரை, தேனி பகுதிகளிலிருந்து வரும் பஸ்களில் பயணம் செய்யும் நிலை உள்ளது. ஞாயிறு, விடுமுறை நாட்கள், விழாக் காலங்களில் ஒட்டன்சத்திரம் வருவதற்கு முன்பே மேற்கண்ட பஸ்களில் கூட்டம் நிரம்பி விடு கிறது. இதனால் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து பயணிப்போர் பஸ்களில் நின்று கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இதேபோல் வார விடுமுறைக்கு கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் வரும் கல்லுாரி மாணவர்கள், திருப்பூரில் உள்ள கம்பெனிகளில் வேலை செய்து விட்டு சனி, ஞாயிறன்று ஒட்டன்சத்திரம் வரும் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதி மக்கள் பயன்படும் வகையில் விடுமுறை, விழாக்காலங்களில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து கோவை, திருப்பூருக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.
05-Dec-2025