மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் வளர்பிறை சஷ்டி வழிபாடு
29-Sep-2025
திண்டுக்கல்: தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். தீயவை நீங்கி, வாழ்வில் ஒளி பரவும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் , கோட்டை மாரியம்மன், பத்ரகாளியம்மன், ரயிலடி சித்தி விநாயகர், கந்தக்கோட்டம் முருகன், தண்டாயுதபாணி கோயில், 108 விநாயகர் கோயில்களிலும், அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு, பால், தயிர், பன்னீர், பழச்சாறு, இளநீர், திருநீர், சந்தனம் என பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவித்து, சிறப்பு அலங்கார பூஜைகளும் நடந்தன. கன்னிவாடி: கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக 30 வகை திரவிய அபிஷேகம் நடத்தப்பட்டு, மூலவர், உற்ஸவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருவாசக முற்றோதலுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயில், கொத்தப்பள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் தீபாவளி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
29-Sep-2025