மேலும் செய்திகள்
கோகோ போட்டியில் வென்ற பள்ளிகள்
26-Jul-2025
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் எஸ்.பி.எம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குறுவட்டப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர். பழநி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இடையேயான குறுவட்ட தடகளப் போட்டிகள் கிறிஸ்துவ பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் எஸ்.பி.எம்., ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் பாலமுருகன் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் 1500 மீ, 800மீ, 200 மீ போட்டிகளில் தங்கம் வென்று தனி நபர் கோப்பையை கைப்பற்றினார். நீளம் தாண்டுதலில் 19, 17,14 வயது மாணவர் பிரிவில் நிதிஷ்குமார், குமரவேல் 2ம் இடம், 800 மீ ஓட்ட போட்டியில் ரோகேஷ் 2ம் இடம் , 110 மீட்டர் விதர்சனா 3ம் இடம், 110 மீ தடை தாண்டுதலில் நிதிஷ்குமார் முதலிடம், தொடர் ஓட்டத்தில் 19 வயது மாணவர் பிரிவில் 2ம் இடம், 19 வயது பிரிவு கால்பந்து போட்டியில் முதலிடம் பெற்றனர். 19 வயது பிரிவில் நடந்த அனைத்து போட்டிகளிலும் மாணவர்கள் வென்றனர். இவர்களை தாளாளர் ஆர்.வி.கே. ரத்தினம், செயலாளர் ஆர்.சங்கீதா, பள்ளி முதல்வர் சிவகவுசல்யா தேவி, நிர்வாக அலுவலர் வாணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
26-Jul-2025