உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் பேகம்பூர் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், ஆதார் கார்டு திருத்தம், வரி ரசீது, மின் பிரச்னைகள் குறித்த பல்வேறு குறைகளுக்கான மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இதில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் பிலால் உசேன், மாநகர பொருளாளர் சரவணன், பகுதி செயலாளர் பஜலூல் ஹக், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அக்பர், மாநகர அவை தலைவர் முகமது இப்ராகிம் கலந்து கொண்டனர். வடமதுரை : கொம்பேறிபட்டியில் நடந்த முகாமில் எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமை வகித்தார். தாசில்தார் சுல்தான் சிக்கந்தர முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., பஞ்சவர்ணம் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர் கருப்பன், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் சொக்கலிங்கம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராஜரத்தினம், முனியப்பன், ஊராட்சி செயலாளர்கள் பரமேஸ்வரன், கோவிந்தசாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை