உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

நத்தம்: கோசுகுறிச்சி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், துணை ஆட்சியர் ராஜகுரு, தாசில்தார் ஆறு முகம், தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் சேக் சிக்கந்தர் பாட்சா, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந் திரன் வரவேற்றார். வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா கலந்து கொண்டனர். வடமதுரை: பி.கொசவபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாசில்தார் பவித்ரா தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன் துவக்கி வைத்தார். மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ, நெசவாளரணி சொக்கலிங்கம், நிர்வாகிகள் சுப்பையா, சுப்புராமன், ஆனந்தி அறிவுக்கண்ணன், ஜீவா, அன்பழகன், பங்கேற்றனர். வேடசந்துார்: கூம்பூர், வாணிக்கரை ஊராட்சிகளை உள்ளடக்கிய உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் கூம்பூரில் நடந்தது. தாசில்தார் ரவிக்குமார் தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சசி முன்னிலை வகித்தார். தி.மு.க., முன்னாள் ஊராட்சி செயலாளர் குமரவேல் வரவேற்றார். மகளிர் உதவித்தொகை, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு உள்ளிட்ட 15 வகையான நலத்திட்டங்களுக்கு மனுக்கள் பெறப்பட்டன. பி.டி.ஓ., அண்ணாத்துரை, தி.மு.க., நிர்வாகிகள் சவுந்தர், கதிரவன், முருகேசன், விஜயகுமார் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் வடிவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ