உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஒட்டன்சத்திரத்தில் முகாம்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமராஜர் மார்க்கெட்டில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் இரண்டாவது முகாமில் நகராட்சி 2 , 3 வது வார்டு பகுதி மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களைஅமைச்சர் சக்கரபாணி பெற்றார்.அப்போது அவர் பேசியதாவது: ஊரகம், நகர் பகுதிகளில் 300 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முகாமிற்கு வரும் மக்களின் உடல்நிலை பேணும் வகையில் மருத்துவ சேவைகளும் வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், பாலு கலந்து கொண்டனர்.