மேலும் செய்திகள்
ஆசிரியர் வெற்றி சங்க நிர்வாகிகள் கூட்டம்
21-Sep-2026
திண்டுக்கல்:தமிழக அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ மாநாடு திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். ஏ.ஐ.எஸ்.ஜி.இ.எப்., பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் துவக்க உரையாற்றினார். வரவேற்பு குழுத்தலைவர் மனோகரன் வரவேற்றார். எம்.பி., சச்சிதானந்தம், பொதுச்செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் டானியல் ஜெயசிங் பேசினர். மாநில தணிக்கையாளர் முபாரக் அலி, சி.ஐ.டி.யு., கண்ணன், வரவேற்புக்குழு செயலாளர் சுகந்தி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊர்ப்புற நுாலகர்கள் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
21-Sep-2026