உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளி மாணவர்களுக்கான அரசு பஸ் சேவை துவக்கம்

பள்ளி மாணவர்களுக்கான அரசு பஸ் சேவை துவக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் இருந்து நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு பஸ் சேவை துவக்க விழா நேற்று நடந்தது. எம்.பி., சச்சிதானந்தம் முன்னிலையில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ., அய்யனார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பஸ்கள் அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மண்டலம் சார்பில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதுபோல் வேடசந்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கும், ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் முத்துக்கிருஷ்ணன், துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை