உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் பயணியை கடித்து குதறிய தெருநாய்

கொடை யில் பயணியை கடித்து குதறிய தெருநாய்

கொடைக்கானல்; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தெரு நாய் கடித்ததில் சுற்றுலா பயணி ஒருவர் காயமுற்றார். ஒடிசாவைச் சேர்ந்தவர் கங்காதர் 56. கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இவர் நேற்று குறிஞ்சியாண்டவர் கோயில் அருகே சென்ற போது அங்கிருந்த தெரு நாய்கள் கங்காதரை விரட்டி விரட்டி கடித்தது. காயமடைந்த நிலையில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் குறிஞ்சியாண்டவர் கோயில் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதியை தெருநாய்கள் கடித்ததில் காயமுற்றார். இது போல் ஒரு வாரத்தில் கொடைக்கானல் நகரில் 8 பேர் தெரு நாய்கள் கடித்து காயமடைந்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி தெருநாய்களிடமிருந்து பொதுமக்களை காக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை