உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொழிலாளியை கடித்து குதறிய தெரு நாய்கள்

தொழிலாளியை கடித்து குதறிய தெரு நாய்கள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் தெரு நாய்கள் கடித்ததில் பெண் தொழிலாளி காய்த்துடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் தெருவை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சரஸ்வதி 52. நேற்று மதியம் வீட்டின் அருகே நடந்து சென்றபோது ரோட்டில் சுற்றித்திரிந்த 10 க்கு மேற்பட்ட நாய்கள் சரஸ்வதியை கடித்து குதறியது. காயமடைந்த அவர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொடைக்கானலில் தெரு நாய்களால் பொதுமக்கள் தாக்கப்படும் செயல்கள் அதிகரித்தும் நகராட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை. நாய்களால் தாக்கப்படும் நிகழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை