5வது நாளாக நீடிக்கும் ஸ்டிரைக்
வடமதுரை: 25 கோரிக்கைகளை வலியுறுத்தி வடமதுரையில் 5வது நாளாக நேற்றும் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். சங்க ஒன்றிய தலைவர் பாலகுருசாமி தலைமை வகித்தார். செயலாளர்முருகேசன், பொருளாளர் சுப்பிரமணி முன்னிலைவகித்தனர். துணைத்தலைவர்கள் வடிவேல்முருகன், பெருமாள், இணைசெயலாளர்கள் பூமிக் கண்ணு, தங்கவேல் பங்கேற்றனர்.