உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பூட்டிய அறைக்குள் சிக்கிய சிறுவன் மீட்பு

பூட்டிய அறைக்குள் சிக்கிய சிறுவன் மீட்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பூட்டிய அறைக்குள் சிக்கிய 2 வயது சிறுவனை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.நந்தவனப்பட்டி மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது 2 வயது மகன் அகிலேஷ். இவர் நேற்று தன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென வீட்டின் உள் அறைக்குள் தனியாக சென்று கதவை பூட்டினார். மீண்டும் சிறுவனால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் வெளியில் வர முடியாமல் உள்ளே இருந்து சிறுவன் கூச்சலிட்டார். பெற்றோர்கள் வெளியில் நின்றபடி கதறினர். அக்கம்பக்கத்தினர் திண்டுக்கல் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான அதிகாரிகள், உடனே சம்பவ இடத்திற்கு வந்து பூட்டப்பட்ட அறையின் கதவை பிரத்யேகமான கருவியை கொண்டு பூட்டை திறந்து உள்ளே சிக்கிய 2 வயது சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். உடனே சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி