மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்..
24-Jun-2025
வேடசந்துார்::திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவியின் சுடிதார் கோட்டை கிழித்து வம்பு செய்த மாணவரை தட்டி கேட்ட தந்தையின் கழுத்தை மாணவரின் நண்பர்கள் பிளேடால் அறுத்துள்ளார்.வேடசந்துார் அருகே நாகம்பட்டியில் குடியிருக்கும் வெளியூர் மாணவி ஒருவர் வேடசந்துார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.இதேபோல் வெளியூர் மாணவர் ஒருவர் நாகம்பட்டியில் தங்கி வேடசந்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். மாணவிக்கு, மாணவர் அடிக்கடி காதல் தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று மாலை மாணவியின் சுடிதார் கோட்டை இழுத்து கிழித்து விட்டார். வீட்டுக்கு சென்ற மாணவி தந்தையிடம் கூற அவர் மாணவரை தட்டிக்கேட்டுள்ளார்.அதற்குள் இரு டூவீலரில் வந்த ஐந்து மாணவர்கள், மாணவி தந்தையின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளனர்.காயமடைந்த அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி விசாரிக்கிறார்.
24-Jun-2025