டூவீலர் திருடிய மாணவர்கள் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட 3 பாலிடெக்னிக் மாணவர்களை திண்டுக்கல் தனிப்படை போலீசார் கைது செய்தனர். நகர் டி.எஸ்.பி.,கார்த்திக் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, திருட்டு நடந்த இடங்களில் சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. திண்டுக்கல், விருவீடு, வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த மூவரும் பாலிடெக்னிக் கல்லுாரியில் நண்பர்களாக அறிமுகமாகி போதைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். தொடர்ந்து, கைச்செலவு, ஸ்டைலுக்காக விலை உயர்ந்த டூவீலர்கள் திருட்டில் ஈடுபட்டு ஊர் சுற்றிவந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மூன்றுபேரும் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து 5 விலை உயர்ந்த டூவீலர்கள் உள்பட மொத்தம் 9 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.