உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மாணவியிடம் நகை பறித்த மாணவர்கள் சிக்கினர்

 மாணவியிடம் நகை பறித்த மாணவர்கள் சிக்கினர்

வத்தலக்குண்டு: மாணவியை மிரட்டி, 15 சவரன் நகை பறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டை சேர்ந்த மாணவர் பட்டிவீரன்பட்டி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, அதே பள்ளியில் படித்த மாணவியுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. மாணவர் மீதான ஈர்ப்பு காரணமாக, மாணவி தன்னிடம் இருந்த நகைகளை சிறிது சிறிதாக கொடுத்தார். ஒரு கட்டத்தில் மாணவியை மிரட்டி, வீட்டிலிருந்த 15 சவரன் நகைகளையும் மாணவர் வாங்கினார். வீட்டிலிருந்த நகைகள் மாயமானதை அறிந்த பெற்றோர், மகளிடம் விசாரித்தபோது உண்மை தெரிந்தது. புகாரின்படி, மாணவர், அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு மாணவரையும் வத்தலக்குண்டு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ