சிறுதானிய சாகுபடிக்கு மானியம்
திண்டுக்கல்:வேளாண்மை துணை இயக்குநர்(மாநிலத் திட்டம்) காளிமுத்து அறிக்கை: சிறுதானிய இயக்கத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்துக்கு மாற்றுப் பயிர் சாகுபடி மூலம் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்க 600 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இடு பொருள்களான, விதைகள், திரவ உயிர் உரங்கள், சூடோமோனஸ், நுண்ணுாட்டக் கலவை, அறுவடை செலவு ஆகியவற்றுக்கு 50 சதவீத மானியம் அல்லது ஏக்கருக்கு ரூ.1,250 மானியம் வழங்கப்படும்.உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்றார்.