மேலும் செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் செயல்படாத போக்குவரத்து சிக்னலால் சிரமம்
23 hour(s) ago
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல் ரோடு லெக்கையன்கோட்டையில் புழுதி ரோட்டால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். ஒட்டன்சத்திரத்தில் இருந்து மெட்டூர் வரை புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதில் லெக்கையன்கோட்டையில் பாலம் கட்டும் பணிகள் நடக்கிறது. ஒட்டன்சத்திரம் வழியாக திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனிக்கு செல்லும் வாகனங்கள் இந்த ரோட்டில் செல்கின்றன. அப்போது ரோட்டில் படிந்துள்ள தூசி மேலே கிளம்புகிறது. ரோடு மேடு பள்ளமாக உள்ளதால் வாகனங்கள் கிடுகிடுவென அசைந்தபடி செல்கின்றன. புழுதி காற்றில் பறப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களை பதம் பார்க்கிறது. இதனால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. பாலம் பணி நடக்கும் இடத்தை சுற்றிலும் ஓட்டல், கடை, குடியிருப்புகள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு அடிக்கடி ரோட்டில் தண்ணீர் தெளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
23 hour(s) ago