தற்கொலை முயற்சி
ஆயக்குடி: வத்த கவுண்டன் வலசை சேர்ந்த விவசாய தொழிலாளி மணிகண்டன் 40. குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியுடன் தகராறு ஏற்பட்டதில் அருகில் இருந்த மேல்நிலை தண்ணீர் தொட்டியில் ஏறினார். அங்கிருந்து தற்கொலை செய்து கொள்ள முயன்று உள்ளார். பழநி தீயணைப்பு துறையினர் மணிகண்டனை மீட்டனர். ஆயக்குடி போலீசார் எச்சரித்து அனுப்பினர்.