உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரக்கன்றுகளை நட்டு சாதிக்கும் சன் அரிமா

மரக்கன்றுகளை நட்டு சாதிக்கும் சன் அரிமா

ச ர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் 12 வதுவார்டு பொதுநல சங்கம்,சன் அரிமா சங்கம் இணைந்து ஏராளமான மரங்களை நடவு செய்து உள்ளது. இதன் தலைவரும் தமிழகம், புதுச்சேரி சுற்றுச்சூழல் தலைவரும் அரிமா சங்க முன்னாள் கவர்னருமான டாக்டர் டி .பி . ரவீந்திரன் 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையான மரக்கன்றுகளை நகர் பகுதியில் மட்டுமல்லாது பல்வேறு நகரங்களில் நடவு செய்து சாதனை படைத்துள்ளார். இதில் ஆனந்தகிரி பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்து அதற்கு வேலி அமைத்து பராமரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் பராமரிப்பவர்களின் பெயர் பொருத்தப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை நடவு செய்த முன்னாள் தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, புதுச்சேரி மாநில கவர்னர் இக்பால் சிங், தமிழக அமைச்சர்கள், பல்வேறு மாவட்ட கலெக்டர்கள், பல்கலை துணைவேந்தர்கள், உச்ச,உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் என முக்கிய பிரமுகர்கள் நடவு செய்துள்ளனர். இவ்வகை மரங்கள் தற்போது நகர் பகுதியில் பசுமை சோலையாக காட்சியளிக்கிறது. சன் அரிமா சங்கம், 12 வது வார்டு பொது நல சங்கம் சார்பில் ஆண்டுதோறும் தமிழ் வழியில் படித்து வரும் மாணவர்களுக்கு கல்லுாரிகளில் உயர் கல்வி படிப்பவர்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. இவரது மனைவி ஆஷா ரவீந்திரன் இருமுறை நகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு நலத்திட்டம், அடிப்படை வசதிகளை செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை