உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாழ்வான மின்ஒயரால் அடிக்கடி கட் ஆகும் சப்ளை

தாழ்வான மின்ஒயரால் அடிக்கடி கட் ஆகும் சப்ளை

வடமதுரை: வடமதுரையில் நெடுஞ்சாலையை குறுக்கிடும் மின்ஒயர் தாழ்வாக செல்வதால் உயரமான வாகனங்கள் உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. வடமதுரையில் நால்ரோடு பை பாஸ் சந்திப்பு பகுதியில் இருந்து 200 மீட்டர் துாரத்தில் ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் கோட்டை நாயுடு களம் பிரிகிறது. இப்பகுதியில் ரோட்டின் குறுக்காக செல்லும் மின்ஒயர்கள் தாழ்வாக உள்ளதால் சரக்கு லோடுடன் வரும் வாகனங்களில் மின்ஒயர்கள் உரசுகின்றன. இதனால் மின் டிரான்ஸ்பார்மரில் சப்ளை துண்டிக்கப்படுகிறது. இவ்வாறு சப்ளை அடிக்கடி ஏற்படுவதும் சீரமைக்கும் வரை இப்பகுதியில் இருக்கும் வீடுகள், வணிக நிறுவனங்கள், விவசாய கிணறுகளுக்கு மின்சப்ளை இல்லாமல் பல்வேறு சிரமங்கள் ஏற்படு கின்றன. இங்குள்ள மின்ஒயரை உயர் மட்டத்திற்கு மாற்றியமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ