உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சர்ச்சைக்குரிய இடத்தில் சர்வே

சர்ச்சைக்குரிய இடத்தில் சர்வே

செம்பட்டி : ஆத்துார் ஒன்றியம் வக்கம்பட்டியில் கும்மம்பட்டி செல்லும் வழித்தடத்தில் பாதை தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே பிரச்னை நீடித்தது. இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடு அமைக்க ஒரு தரப்பினர் வலியுறுத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சிவசேனா மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மற்றொரு தரப்பினர், சம்பந்தப்பட்ட பகுதி பட்டா நிலம் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி தாசில்தார் முத்துமுருகன் தலைமையிலான அதிகாரிகள் சர்ச்சைக்குரிய இடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். போலீஸ் ஏ.டி.எஸ்.பி., தெய்வம் தலைமையிலான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !