உறுதிமொழி எடுப்பு
குஜிலியம்பாறை :சட்டசபை தேர்தலில் வாக்களிப்பின் அவசியத்தை வாக்காளர்களுக்கு உணர்த்தும் வகையில் குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வட்ட வழங்கல் அலுவலர் சு.மேனகா தலைமையில் ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆதார் மையத்திற்கு வருகை தந்த மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.