உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் தமிழ் கனவு பரப்புரை

பழநியில் தமிழ் கனவு பரப்புரை

பழநி: பழநியாண்டவர் கலைப் பண்பாட்டுக் கல்லுாரியில் தமிழ் கனவு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தலைமை வகித்தார். கலெக்டர் சரவணன், ஆர்.டி.ஓ., ஜெயபாரதி, கல்லூரி கல்வி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம், பழநி கோயில் அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் ரவிசங்கர் பங்கேற்றனர். உயர் கல்வித் துறை அமைச்சர் பேசுகையில், அரசின் திட்டங்களை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது பரப்புரையின் நோக்கமாகும். தமிழ்நாடு முழுவதும் 200 கல்லுாரிகளில் இந்நிகழ்ச்சி நடத்த திட்டமிடப் பட்டள்ளது. பழநியில் 99 வது நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு, வழிகாட்டி, தமிழ் பெருமிதம் கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி