போலீசில் ஆசிரியர்கள் புகார்
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் தேவாங்கர் மகாசபைக்கு பாத்தியப்பட்ட இரு மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நிர்வாகிகள் தேர்வு தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை நீடிக்கிறது. இச்சூழலில் பள்ளி தலைமையாசிரியர் இந்திரா தலைமையில் 70-க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஊர்வலமாக சின்னாளப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வந்து பள்ளி நிர்வாக பிரச்னை தொடர்பாக புகார் அளித்தனர்.அதில், தினமும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தேவாங்கர் சமுதாயத்தின் முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் சிலர் வந்து செல்வதாகவும், வரவு செலவு கணக்குகளை காட்டுங்கள் என மிரட்டுகின்றனர். முறையான நிர்வாகிகள் அறிவிப்புபின் பள்ளிக்கு வந்து தங்களிடம் கணக்கு வழக்குகளை கேட்டால் கொடுக்கதயாராக உள்ளோம்.ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் மிரட்டல் வருவதால் இப்பிரச்னைக்கு தீர்வு காண கேட்டுள்ளனர்.