உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆசிரியர் சங்க முப்பெரும் விழா

ஆசிரியர் சங்க முப்பெரும் விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட தமிழக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பணிநிறைவு பாராட்டு விழா, புதிய நிர்வாகிகள் அறிமுக விழா, போராட்டங்களில் சிறை சென்றோருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் பிரான்சிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி.,சச்சிதானந்தம் பேசினார். நிறுவனத்தலைவர் மாயவன் பேசினார். ஆசிரியர்களை பாதுகாக்க பணிபாதுகாப்பு சட்டத்தை கொண்டுவருவது, காலிப்பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கவேண்டும், 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !